முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை: நீர்வரத்து வினாடிக்கு 20,505 கன அடி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,505கன அடியாக அதிகரிப்பு.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 4:51 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனையடுத்து கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது.

நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,548 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 20,505 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், நேற்று காலை 119.24 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 119.65 அடியாக உயர்ந்துள்ளது.

  • அணையின் நீர் இருப்பு 92.91 டிஎம்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.