கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
காவிரிப்பட்டிணத்தில் குடியிருப்பு பகுதியான எம்ஜிஆர் நகரில் ஐந்து அடிக்கு மேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாரிச்சட்டி அள்ளி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நெல் வயல்களும் மழைநீரில் முற்றிலும் மூழ்கியுள்ளன. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களில் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு ( மி.மீ). நெடுங்கல் 123.20, போச்சம்பள்ளி 97, கிருஷ்ணகிரி 76.2, பாரூர் 74, கிருஷ்ணகிரி அணை 73, ஊத்தங்கரை 49, தேன்கனிக்கோட்டை 47, ஓசூர் 32.90, பாம்பாறு அணை 30, தளி , சின்னாறு அணை தலா 10, அஞ்செட்டி 3.4, சூளகிரி 3.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.