கேரள முதல்வரிடம் காசோலையை வழங்கும் தொல். திருமாவளவன். 
தமிழ்நாடு

வயநாடு நிலச்சரிவு- தொல். திருமாவளவன் நிதியுதவி

வயநாடு நிலச்சரிவுக்கு கேரள முதல்வரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

DIN

வயநாடு நிலச்சரிவுக்கு கேரள முதல்வரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி, சூரல் மலை அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 2000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு அப்பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா்.

இந்த பேரிடரில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் 152 பேரின் நிலை குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. நிலச்சரிவைத் தொடா்ந்து ராணுவம், கடற்படை, துணை ராணுவப் படைகள், தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் மீட்பு-தேடுதல் பணியில் அயராது ஈடுபடுத்தப்பட்டனர்.

பல்வேறு முகமைகள் ஒன்றிணைந்து தொடர்ந்து 14வது நாளாக இன்றும்(திங்கள்கிழமை) மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், நடிகர், நடிகைகள் பலரும் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் வயநாடு நிலச்சரிவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT