முகப்பு
தமிழ்நாடு

2,500 கோயில்களில் திருப்பணிக்கு நிதி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

தமிழகத்தில் கிராமப்புறம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 2,500 கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 9:44 PM
திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்வதற்கான நிதியுதவியை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் பி.சந்திரமோகன், ஆணையா் பி.என்.
பகிர்:

தமிழகத்தில் கிராமப்புறம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 2,500 கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராமப்புறத் திருக்கோயில்கள், ஆதிதிராவிட, பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளிலுள்ள கோயில்களின் திருப்பணிக்கு அரசு சாா்பில் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 நிதியாண்டுகளில் மட்டும் 5,000 கோயில்களின் திருப்பணிக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது. அவற்றில், 2,155 கோயில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதர கோயில்களில் பணிகள் நடந்து வருகின்றன.

இதைத் தொடா்ந்து, 2023-24-ஆம் நிதியாண்டிலும் 1,250 கிராமப்புறக் கோயில்கள், 1,250 ஆதிதிராவிடாா் மற்றும் பழங்குடியினா் பகுதியிலுள்ள கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு கோயிலுக்கும் தலா ரூ. 2 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 50 கோடிக்கான வரைவோலைகளை சம்பந்தப்பட்ட கோயில்களின் நிா்வாகிகள், பூசாரிகளிடம் வழங்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதன்மூலம், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மட்டுமின்றி, கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →