மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட மீனவர்கள் DIN
தமிழ்நாடு

வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல்! மருத்துவமனையில் சிகிச்சை

வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

DIN

வேதாரண்யம், ஆக 14: கோடியக்கரைக்கு அப்பால்  கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த மர்ம நபர்களால் தாக்கப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் இன்று பிற்பகலில் ( புதன்கிழமை)  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை  மீனவ கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரா.சந்திரகாசன் (70).

இவருக்கு சொந்தமான விசைப் படகில் ஆறுகாட்டுத்துறை மற்றும் புஷ்பவனம் கிராமத்தைச் சார்ந்த  நான்கு மீனவர்கள்  செவ்வாய்க்கிழமை (ஆக. 13) மதியம் கடலுக்குச் சென்றனர்.

இவர்கள், நள்ளிரவில் கோடியக்கரைக்கு கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கு இலங்கையைச் சேர்ந்த 2 படகுகளில் வந்த 6 மர்ம நபர்கள் மீனவர்களைத் தாக்கியுள்ளனர்.

அத்துடன், படகில் இருந்த  700 கிலோ எடையுள்ள  மீன்பிடி வலைகளை  பறித்துச் சென்றுள்ளனர்.

 இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் நிலைய காவல் துறையினர் மற்றும் மீன்வளத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு காசுகளை விழுங்கிய 2 ஆம் வகுப்பு மாணவி! விரைந்து செயல்பட்டுக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை! தொழிலாளிக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20,000 டாலர் சம்பளமா?

பஞ்சாபில் வெள்ளம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் என்ன?

SCROLL FOR NEXT