சதுரகிரிக்கு செல்ல அனுமதி ரத்து 
தமிழ்நாடு

சதுரகிரிக்குச் செல்ல அனுமதி ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்!

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் அனுமதி ரத்து..

DIN

சதுரகிரியில் தொடர் மழை பெய்துவருவதால், பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சாப்டூா் வனச்சரகத்தில் புகழ் பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு மலைப் பாதை வழியாக 10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.

இங்கு பிரதோஷம், அமாவாசை, பெளா்ணமி ஆகிய நாள்களில் மட்டுமே பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ஆவணி மாத பிரதோஷம், பெர்ணமியையொட்டி இன்று முதல் 20-ம் தேதி வரை நான்கு நாள்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கோயில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாக அறிவித்துள்ளது.

இன்று சனி பிரதோஷம் என்பதால் ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல ஆவலுடன் வந்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

உலகம் எல்லா உயிா்களுக்குமானது என்பதை மனிதா்கள் உணர வேண்டும்: கவிதா ஜவகா்

வரதட்சிணைக் கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

12 கடைகள், நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT