அமைச்சர் மா.சுப்பிரமணியன், 
தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்டார்.

DIN

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு 9,800, பிடிஎஸ் படிப்புக்கு 2,150 இடங்கள் உள்ளன. கடந்தாண்டை விட 150 மாணவர்களுக்கு கூடுதலாக இடம் கிடைத்துள்ளது.

நாமக்கலைச் சேந்த ரஜினீஷ் 720 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். சென்னை அயனப்பாக்கத்தைச் சேர்ந்த சையது, சென்னை சேத்துப்பட்டு மாணவி சைலஜா ஆகியோர் 2 மற்றும் 3வது இடம் பிடித்துள்ளனர்.

மேலும் 7.5% இடஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் ரூபிகா முதலிடம் பிடித்துள்ளார். வெளிப்படைத் தன்மையோடு பணியாற்றி, பட்டியலை வெளியிட்டுள்ளோம்.

முதன்மை பெற்ற 10 மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆக.21-ம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT