ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

முதல்வரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிப் பிரிவுச் செயலாளர்கள் மாற்றம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

DIN

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிப் பிரிவுச் செயலாளர்கள் மாற்றம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தலைமைச்செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து நா.முருகானந்தம் ஐஏஎஸ் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நேற்று(ஆக. 19) நியமனம் செய்யப்பட்டார். இவர் முதல்வரின் முதல் தனிச் செயலாளராக இருந்தார்.

தொடர்ந்து, முதல்வரின் தனிச் செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, முதல்வரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். அந்த சமயத்தில் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தியவர் .

இரண்டாவது செயலாளராக எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ், மூன்றாவது செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உமா நாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய மூவரும் முறையே முதல்வரின் 2, 3, 4 ஆவது தனிச் செயலாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரம்: அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்- ராமதாஸ்

அமித் ஷாவின் பதில்தான் எங்களுடையதும்; கூட்டணி விரிவுபடுத்தப்படும்: தமிழிசை

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு-காஷ்மீரில் 2 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்!

முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம் - முதல்வர் Stalin

விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

SCROLL FOR NEXT