முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 2:26 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோன்று வேலூர், திருவள்ளூர், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்திருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →