துரைமுருகன் / மு.க. ஸ்டாலின் / ரஜினிகாந்த் 
தமிழ்நாடு

துரைமுருகனும், ரஜினியும் நீண்டகால நண்பர்கள்: மு.க. ஸ்டாலின்

அமைச்சர் துரைமுருகனும் ரஜினிகாந்தும் நீண்டகால நண்பர்கள் எனக் குறிப்பிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

DIN

அமைச்சர் துரைமுருகனும் ரஜினிகாந்தும் நீண்டகால நண்பர்கள் என்றும் இதனை அவர்களே சொல்லிவிட்டதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 27) தெரிவித்தார்.

இவர்கள் இருவருக்கு இடையிலான விவகாரத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய மு.க. ஸ்டாலின், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதன் மூலம் கிடைத்த முதலீடுகள் குறித்துப் பேசினார்.

மேலும், அமைச்சர் துரைமுருகன் - ரஜினிகாந்த் இடையிலான வார்த்தைப்போர் குறித்து அவர் பேசியதாவது, ''அமைச்சர் துரைமுருகனும் ரஜினிகாந்தும் நீண்டகால நண்பர்கள். இதனை அவர்களே கூறிவிட்டனர். இதை நீங்கள் துரைமுருகன் கூறியதைப் போன்று, நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்க பயணம் முடிந்தவுடன் அமைச்சரவை மாற்றம் இருக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்தார். மாற்றம் ஒன்றே மாறாதது எனவும் முதல்வர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: நறுவீ மருத்துவமனை சாதனை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிவகாசியில் வணிக வளாகம் கட்டுமானப் பணி மீண்டும் தொடக்கம்

சிவகாசி-விளாம்பட்டி சாலையில் குளம் போல தேங்கும் மழை நீா்

சிவகாசி அஞ்சலகத்தில் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு மையம் மூடல்

SCROLL FOR NEXT