ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இறைச்சி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி வாங்க மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
குறிப்பாக மீன்களின் விலை சற்று குறைவாக உள்ளதால் மீன்களை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.
மேலும் இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது ஃபென்ஜால்புயலின் தாக்கத்தினால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதனால் தான் மீன்களின் விலை சற்று உயரம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீன்களின் விலை சற்று குறைந்து இருப்பதால் மக்கள் மீன்களை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் தமிழகத்திலும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.