ஃபென்ஜால் புயல் கோரத்தாண்டவம் |புதுச்சேரி ANI
தமிழ்நாடு

ஃபென்ஜால் புயல்: துல்லியமாகக் கணித்த வானிலை ஆய்வாளர்!

ஃபென்ஜால் புயல்: துல்லியமாகக் கணித்த தமிழ்நாடு வெதர்மேன்!

DIN

வானிலை முன்னறிவிப்புகளை கணித்து வழங்கி வரும் தமிழகத்தைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தமிழக மக்களிடையே நன்கு அறியப்பட்ட நபராக இருப்பவர். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வானிலை முன்னறிவிப்புகளை முன்கூட்டியே வழங்கி வந்தாலும், பிரதீப் ஜானின் வானிலை கணிப்புகள் துல்லியமாக இருப்பதால், அவர் எப்போது பதிவுகளை வெளியிடுவார் என்ற எதிர்பர்ப்பு மழைக் காலங்களில் மக்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கும்.

விழுப்புரம்

அந்த வகையில், ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில், நள்ளிரவு கடந்து இன்று(டிச. 1) பகல் வரை கடற்கரையை ஒட்டியே நகராமல் நிலைத்திருந்ததாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, ‘புயல் கடல் பரப்பிலேயே இருப்பதாகவும், இன்று(டிச. 1) பகல் அல்லது மாலை வேளையில்தான் அது கடற்கரைப் பகுதியை(நிலப்பரப்பை) கடக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக, இன்றும் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகளவில் இருக்கும்’ என்றும் எச்சரித்திருந்தார்.

‘சென்னையை பொறுத்தவரை, இன்று அவ்வப்போது மழை பெய்யும். குறைவான நேரத்தில் அதிக மழைப்பொழிவை சென்னையில் எதிர்பார்க்கலாம்’ என்றும் தெரிவித்திருந்தார்.

விழுப்புரத்தில் அதி கனமழை பெய்யும் என சனிக்கிழமை(நவ. 30) இரவு அவர் எச்சரித்திருந்தார். சனிக்கிழமை(நவ. 30) இரவு அவர் வெளியிட்டிருந்த பதிவில் கூறியிருப்பதாவது, ‘புயல் கடல் பரப்பிலேயே நிலைத்திருக்கப் போதாகவும், இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்யும் என்று எச்சரித்திருந்தார். இன்று காலை வரை புயல் கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்றும், இதனால் மேற்கண்ட பகுதிகளில் 400 மி.மீ. முதல் 500 மி.மீ. வரை பதிவாகக் கூடுமென’ தெரிவித்திருந்தார். ’இன்று கடலூரில் அதி கனமழை பெய்யும்’ என்றும் தெரிவித்திருந்தார்.

‘வரலாற்றில் பதிவு செய்யும் விதத்தில் அதீத மழைப்பொழிவாக இது இருக்கக்கூடுமென்றும்’ அவர் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்டேஜ் கார் பேரணி - புகைப்படங்கள்

மோடியின் கொள்கை தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம்: ஜெய்ராம் ரமேஷ்

தொடங்கியது பிக் பாஸ் 9: முதல் போட்டியாளர் திவாகர் - அரோரா!

விற்பனைக்கு வரும் அகல் விளக்குகள் - புகைப்படங்கள்

உணவு தருவதாகக் கூறி... காரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

SCROLL FOR NEXT