திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 92-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
'தமிழினம் விழிப்புறவும் பகுத்தறிவால் மேன்மையுறவும் நாளும் தன் பரப்புரைத் தொண்டறத்தை மேற்கொண்டு வரும் பெரியாரின் பெருந்தொண்டர், தாய்க்கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
தமிழினத்தின் அரணாக விளங்கும் பெரியாரியக் கொள்கைகளை நாளும் சமுதாயத்தில் விதைத்திடும் ஆசிரியர் வாழிய பல்லாண்டு!' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.