ஸ்ரீரங்கத்தில் விபத்து 
தமிழ்நாடு

ஸ்ரீரங்கத்தில் மண்ணில் சிக்கிய தொழிலாளி பத்திரமாக மீட்பு

ஸ்ரீரங்கத்தில் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணியின்போது மண்ணில் புதைந்த தொழிலாளி பத்திரமாக மீட்பு

DIN

ஸ்ரீரங்கத்தில் மண் சரிவில் சிக்கிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

20 அடி பள்ளத்தில் மண்ணில் புதைந்த நபரை ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மண்ணில் புதைந்த மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளி 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே பள்ளம் தோண்டி, குடிநீர் குழாய் பொருத்தும் பணிகளை மேற்கொண்டபோது மண் சரிவில், திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியைச் சேர்ந்த செல்வம் (46) என்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் புதையுண்டார்.

குடிநீர்குழாய் சீரமைப்பதற்காக ஒப்பந்த முறையில் அழைத்துவந்த நிலையில் புதிய பாதுகாப்பு வழிமுறைகளை கையாளாமல் மாநகராட்சியினர் பணிகளை மேற்கொண்டதால் ஒப்பந்த ஊழியர் புதையுண்ட அவலம் நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.

மண்ணில் புதைந்த ஒப்பந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தொழிலாளியை உயிருடன் மீட்டனர்.

இனி வருங்காலங்களில் இது போன்று பணியில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT