கடலூர்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

வெள்ள பாதிப்பு: கடலூரில் மத்தியக் குழு ஆய்வு

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மத்தியக் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

DIN

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மத்தியக் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

ஃபென்ஜால் புயல், பலத்த மழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டங்களுக்கு உள்பட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள், தென்பெண்ணை ஆற்றின் கரைகள், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிா்கள் ஆகியவை சேதமடைந்தன.

இந்தநிலையில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மத்தியக் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பண்ருட்டி அருகே பகண்டை, மேல்பட்டாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய உள்துறை இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

சிரியாவில் சர்வாதிகார ஆட்சி முடிவு: கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

பின்னா், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சேத விவரங்கள் குறித்து அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரியவந்ததுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி தமிழக வந்த மத்தியக் குழு சனிக்கிழமை விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஆய்வு நடத்தியது.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கரையை கடப்பதற்கு முன், விழுப்புரம் மாவட்டத்தில் நவ.30ஆம் தேதி தொடங்கிய மழை, புயல் கரையைக் கடந்த பின்னரும் டிச.1ஆம் தேதி இரவு வரை நீடித்தது. கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT