கொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணி, மனைவி அலமேலு, மகன் செந்தில்குமார். 
தமிழ்நாடு

பல்லடம் அருகே 3 பேர் கொலை: போர்வை விற்பவர்களின் விவரம் சேகரிப்பு

பல்லடம் அருகே 3 பேர் கொலை தொடர்பாக கம்பளி போர்வை விற்பவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

DIN

பல்லடம் அருகே 3 பேர் கொலை தொடர்பாக கம்பளி போர்வை விற்பவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தெய்வசிகாமணி, அலமேலு தம்பதி, இவர்களது மகன் செந்தில்குமாா் ஆகிய மூவரும் மா்மக் கும்பலால் கடந்த நவம்பர் 29ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெய்வசிகாமணி தோட்டத்தில் விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியைச் சோ்ந்த பாலமுருகன், அலமேலுவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் அவரை கடந்த 20 நாள்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கிவிட்டனா்.

சிரியாவில் சர்வாதிகார ஆட்சி முடிவு: கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

எனவே, சந்தேகத்தின்பேரில் தனிப்படை போலீஸாா் சாயல்குடி சென்று பாலமுருகனை பிடித்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளைப் பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதனிடையே 3 பேர் கொலை தொடர்பாக கம்பளி போர்வை விற்பவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். பல்லடம் காவல்நிலையத்திற்கு வரவழைத்து கை ரேகை பதிவு உள்ளிட்ட விவரங்களை காவலர்கள் சேகரித்து வருகின்றனர். பிற மாநிலங்களில் இருந்து வந்து கம்பளி போர்வை விற்பவர்களின் ஆதார் நகல் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

ரூ.19,000 கோடி நிதியை நிறுத்திய டிரம்ப் உத்தரவு ரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆஹா... கலக்கலா இருக்கே சாய்! கேட்க கேட்க பிடிக்கும் ஊறும் பிளட்!

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!

SCROLL FOR NEXT