முத்துக்குமரன் படம் |எக்ஸ்
தமிழ்நாடு

பிக் பாஸ் 8: சாச்சனா கூறியதை பின்பற்றுகிறாரா முத்துக்குமரன்?

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் சாச்சனா கூறிய வார்த்தைகளை முத்துக்குமரன் பின்பற்றுகிறாரா? என ரசிகர்கள் கருத்து.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் சாச்சனா கூறிய வார்த்தைகளை முத்துக்குமரன் பின்பற்றுகிறாரா? என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சாச்சனா வெளியேறும்போது, ’ஜெயிக்கனும் முத்து, கடந்த இரு வாரங்களாக உன்னுடைய விளையாட்டு தனியாகத் தெரியவில்லை’, ஜெயிக்கனும் எனக் கூறிவிட்டுச் சென்றார்.

இன்று வெளியான மூன்று முன்னோட்ட விடியோக்களில் இரண்டு விடியோக்கள் முத்துக்குமரனை மையப்படுத்தி வெளியாகியுள்ளது.

இதனால், சாச்சனா கூறிய வார்த்தைகளை பின்பற்றி முத்துக்குமரன் தனது ஆட்டத்தை வேகப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 10வது வாரத்தை எட்டியுள்ளது. இதில், இந்த வாரத்தின் தலைவராக ரஞ்சித் செயல்படுகிறார்.

இதனிடையே பிக் பாஸ் கொடுத்த ஆலை பணியாளர்கள் டாஸ்க்கில் ரஞ்சித், அன்ஷிதா, அருண் பிரசாத், ராணவ், பவித்ரா, ரயான், சத்யா ஆகியோர் பணியாளர்களாக விளையாடுகின்றனர்.

முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், செளந்தர்யா, மஞ்சரி, ஜெஃப்ரி, தர்ஷிகா, வி.ஜே. விஷால் ஆகியோர் ஆலை மேலாளர்களாகவும் அதிகாரிகளாகவும் விளையாடுகின்றனர்.

இந்த டாஸ்க்கிற்கு வெளியாகியுள்ள 3 முன்னோட்ட விடியோக்களில் இரண்டு விடியோக்களில் முத்துக்குமரனை மையமாக வைத்து வெளியாகியுள்ளது.

கடந்த இரு வாரங்களாக முத்துக்குமரனின் விளையாட்டு தனியாகத் தெரியவில்லை என்றும், குழுவாக விளையாடும்போது மட்டுமே முத்துக்குமரன் தெரிவதாகவும் கருத்துகள் நிலவியது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய சாச்சனா, இதனைக் குறிப்பிட்டு முத்துவிடம் பேசிவிட்டுச் சென்றார். சாச்சனாவின் வார்த்தைகளை உணர்ந்த முத்துக்குமரன் தனது ஆட்டத்தை பலப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் பலர் முன்னோட்ட விடியோக்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டில் மீண்டும் சர்ச்சை: முத்துக்குமரனை தரக்குறைவாக பேசிய அருண்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT