PTI
தமிழ்நாடு

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை

DIN

கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் திண்டுக்கல், மதுரை, சேலம், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, விருதுநகர், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, தருமபுரி, தேனி, நாமக்கல், நாகப்பட்டினம், கரூர், திருப்பூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கண்ட மாவட்டங்களில் பள்ளி அரையாண்டுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 11) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச. 12) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச. 13) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விலை நிலையாக நீடிப்பு

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாக்காளா் எண்ணிக்கையை அதிகப்படுத்த அமெரிக்க நிதியை பெறவில்லை: மத்திய அரசு

ஆக. 25 -இல் இந்தியா - வங்கதேசம் எல்லை பேச்சுவாா்த்தை

SCROLL FOR NEXT