தமிழ்நாடு

அதிமுக பொதுக் குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

DIN

அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.

இவ்விரு குழுக்களின் கூட்டமும் ஒரே அரங்கத்தில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கூட்டம் தொடங்கியதும் மறைந்த அரசியல் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, எஸ்.எம்.கிருஷ்ணா, ஈவிகேஎஸ் இளங்கோவன், நடிகர் டெல்லி கணேஷ், தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோரது மறைவுக்கும் அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுக்கு இன்றைய பொதுக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொதுக் குழு, செயற்குழுவில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

  • மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைப்பதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தி தீர்மானம்

  • தமிழகத்திற்கான நிதிப் பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்

  • கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்

  • சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க திமுக அரசை வலியுறுத்தி தீர்மானம்

  • திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்

  • வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளைச் சரிசெய்து, நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம் நிரைவேற்றப்பட்டுள்ளன.

  • மேலும், ஃபெஞ்சால் புயல் பேரிடர் காலத்தில் சரியாக செயல்படாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்பு உள்ளிட்டவற்றுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • டங்ஸ்டன் சுரங்கத்தை ஆரம்பத்திலேயே தடுக்க தவறியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • ஃபார்முலா 4 பந்தயம், பேனா நினைவுச் சின்னம் ஆகியற்றுக்காக நிதியை வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தவறிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • கோதாவரி - காவிரி, பரம்பிகுளம் - ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களை தொடர தவறிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • நீட் தேர்வு ரத்து குறித்து நாடகமாடும் அரசுக்கு கண்டனம்

  • இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக அரசுக்கு கண்டனம்

  • 2026ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெப்கோ வங்கியில் மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகள்

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

SCROLL FOR NEXT