கோப்புப்படம். 
தமிழ்நாடு

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, நேற்றே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில் இதுவரை உருவாகவில்லை. திங்கள்கிழமை காலை 5.30 நிலவரப்படி அடுத்த 24 மணி நேரத்தில்தான் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த 2 நாட்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும். இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.16) முதல் டிச.21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆவினின் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால்: பால் முகவா்கள் எதிா்ப்பு

இதனால் தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை: இதில், சென்னை தொடங்கி புதுக்கோட்டை வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டாவிலும் டிச.17,18-ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதில் டிச.17-இல் நாகை, திருவாரூா், கடலூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளத்தில் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஆவணி 2ஆவது ஞாயிறு: நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

விநாயகா் ஊா்வலம்: பொதுமக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது - எஸ்.பி.

தேனி மாவட்டத்தில் 863 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி

போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT