கோப்புப்படம். 
தமிழ்நாடு

அரசு சொத்தை விலை பேசினேனா? இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்

புதுச்சேரி அரசு சொத்தை விலைக்கு கேட்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார்.

DIN

புதுச்சேரி அரசு சொத்தை விலைக்கு கேட்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் புதுச்சேரிக்கு சென்று இருந்தார். அங்கு அவர் சுற்றுலாத் துறை அமைச்சரை சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பில் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக ஒரு செய்தி பரவியது. விக்னேஷ் சிவன் பற்றிய இந்த செய்தி இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதுதொடர்பான ஏராளமான மீம்ஸ்களும் உலா வந்தன. இந்த நிலையில் புதுச்சேரி அரசு சொத்தை விலை பேசியதாக வெளியான தகவல் தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், எனது எல்ஐகே படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி கேட்க சென்றேன். மரியாதை நிமித்தமாக முதல்வர், சுற்றுலாத் துறை அமைச்சரவை சந்தித்தேன்.

நடிகா் ராஜ் கபூரின் 100-ஆவது பிறந்தநாள் விழா: பாகிஸ்தானில் கோலாகல கொண்டாட்டம்

எதிர்பாரதவிதமாக உள்ளூர் மேலாளர் ஒருவர் அவருக்காக ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக விசாரித்துக் கொண்டிருந்தார். தற்போது இந்த தகவல் தவறுதலாக என்னுடன் இணைத்து சொல்லப்பட்டு வருகிறது. அரசு சொத்து விவகாரத்தில் வெளியான மீம்ஸ்கள் வேடிக்கையாக இருந்தது. அது எனக்கு உத்வேகமும் அளிக்கிறது. ஆனால் அவையெல்லாம் தேவையற்றது.

அதனால் இந்த தகவலை தெளிவுப்படுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT