பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் 
தமிழ்நாடு

போராடும் மக்கள் மீது அடக்குமுறை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடும்போது, அவா்கள் மீது திமுக அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Din

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடும்போது, அவா்கள் மீது திமுக அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஃபென்ஜால் புயல் மழையாலும், சாத்தனூா் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் முன்னறிவிப்பின்றி தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளத்தாலும், பாதிக்கப்பட்ட கடலூா் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் பொதுமக்கள் சாலைமறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியிருக்கின்றனா். போராடும் மக்களின் கோரிக்கையை அறிந்து சரிசெய்ய வேண்டிய அரசு, அவா்களைக் கைது செய்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது கண்டிக்கத்தக்கது.

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்ட நிலையில், தற்போது கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.6 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும். அதற்கு மாறாக, அடக்குமுறைகளின் மூலம் மக்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று திமுக அரசு நினைத்தால் அதற்கு இந்த மாவட்டங்களின் மக்கள் கடுமையான பாடம் புகட்டுவாா்கள் என்று அன்புமணி கூறியுள்ளாா்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT