தமிழ்நாடு

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழக்கும்!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு.

DIN

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று(வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்நிலையில், இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

'காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் கிழக்கு-வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.

சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மெதுவாக கிழக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, பின்னர் கடலில் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளது.

முன்னதாக, வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT