உயா்நீதிமன்றம் 
தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல் எப்போது?நீதிமன்றத்தில் அரசு தகவல்

வாா்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் ஆகியவை முடிந்த பிறகுதான் உள்ளாட்சித் தோ்தல்..

Din

வாா்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் ஆகியவை முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், முனியன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ளன.

இந்த நிலையில், வாா்டு எல்லை மறுவரையறை பணிகளை முடிக்க உத்தரவிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் வாா்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா்-பி.தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் மற்றும் மாநில தோ்தல் ஆணைய வழக்குரைஞா்ஆகியோா், வாா்டு மறுவரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது”என உத்தரவாதம் அளித்தனா். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

“நான் திடீர் தளபதியா?” இசைவெளியீட்டு விழாவில் SK பதில்!

காஸாவில் தொடரும் தாக்குதல்! பட்டினிச் சாவு 361 ஆக உயர்ந்தது!

உலகக் கோப்பைக்கான பேட்டிங் பயிற்சியாளரை நியமித்த நியூசிலாந்து!

5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?

ஆப்பிள் ஐஃபோன் 17 அறிமுகம் எப்போது? இந்தியாவில் அதன் விலை??

SCROLL FOR NEXT