முகப்பு
தமிழ்நாடு

'அறிவார்ந்த சமத்துவச் சமுதாயத்துக்கு பெரியார் பாதையில் பயணிப்போம்' - விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Updated On : 24 டிசம்பர், 2024 at 6:44 AM
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் விஜய்.
பகிர்:

பெரியார் நினைவு நாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பெரியார் நினைவு நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள அலுவலகத்தில் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர்  எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்' என்று பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →