நாகை - இலங்கை படகு சேவை: புத்தாண்டில் மீண்டும் தொடக்கம்!
நாகை - இலங்கை படகு சேவை குறித்து...
நாகை - இலங்கை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு சேவை புத்தாண்டு முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையேயான படகு சேவை சுமார் 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கடந்த அக். 14, 2023 முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது வடகிழக்கு பருவமழை காரணமாக கப்பல் சேவை 10 நாள்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.
நாகை - காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை மீண்டும் 2024 ஆகஸ்ட் 16 அன்று தொடங்கியது. இந்த நிலையில், இந்தப் படகு சேவை வானிலை காரணமாக நவ. 19 முதல் டிச. 18 வரை நிறுத்தப்படும் என்று கப்பல் சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ஜனவரியில் புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு!
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 2 முதல் மீண்டும் இந்த சேவை தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கான டிக்கெட் முன்பதிவு டிச. 25 முதல் தொடங்கியுள்ளது. வாரத்திற்கு 6 நாள்கள் இந்தச் சேவை இருக்கும் என்றும், ஒரு சுற்றுக்கான போக்குவரத்து டிக்கெட் செலவு ரூ. 35,000 வரை நிர்னயிக்கப்பட்டுள்ளதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.