தமிழக ஆளுநர் - விஜய் பரிமாறிக் கொண்ட புத்தகங்கள்  
தமிழ்நாடு

தமிழக ஆளுநர் - விஜய் பரிமாறிக் கொண்ட புத்தகங்கள் என்ன?

தமிழக ஆளுநரை விஜய் சந்தித்தபோது பரிமாறிக் கொண்ட புத்தகங்கள் பற்றி...

DIN

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்தபோது நினைவுப் பரிசாக புத்தகங்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை, ஃபெஞ்ஜல் புயல் நிவாரணம் உள்ளிட்டவை தொடர்பாக ஆளுநரிடம் விஜய் மனு அளித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மனு அளித்தார்.

இந்த சந்திப்பின்போது, ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை நினைவுப் பரிசாக நடிகர் விஜய் வழங்கினார். பதிலுக்கு, பாரதியார் கவிதைகள் தொகுப்பை நினைவுப் பரிசாக ஆளுநர் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT