தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை
சென்னை, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: சென்னை, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக கடந்த சில மாதங்களாக பெரிய அளவிலான சோதனைகளை என்ஐஏ நடத்தி வருகிறது. இந்தச் சோதனைகளில் பயங்கரவாதிகள் பலா் கைது செய்யப்பட்டனா்.
இதையும் படிக்க | பின்னி மில்லில் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.50 கோடி லஞ்சம்!
இந்த நிலையில், பிற நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊடுருவல் செய்தனரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.