ஆளுநர் ஆர்.என்.ரவி 
தமிழ்நாடு

ஆளுநர் ரவியுடன் பேரவைத் தலைவர் அப்பாவு சந்திப்பு

தமிழக சட்டப் பேரவைத் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

DIN

தமிழக சட்டப் பேரவைத் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன், தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் வரும் பிப். 12-ஆம் தேதி தொடங்கவுள்ளது. வரும் பிப், 19-ஆம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான (2024-25) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

வரும் நிதியாண்டுக்கான (2024-25) முன்பண செலவு மானிய கோரிக்கையை, பிப். 20-ஆம் தேதியன்றும், 2023-24-ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான நிதிநிலை அறிக்கையை பிப். 21-ஆம் தேதியன்றும் நிதியமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார். 

பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT