முகப்பு
தமிழ்நாடு

விஜய் வருகை அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும்!

நடிகர் விஜய் வருகை அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:40 PM
விஜய் / கே.எஸ். அழகிரி (கோப்புப்படங்கள்)
பகிர்:


நடிகர் விஜய் வருகை அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

அரசியல் கட்சித் தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் நடிகர் விஜய்யின் இந்த செயல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்படத்துறையில் செல்வாக்குமிக்கவராக கலைப்பணி ஆற்றும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன். 

மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சுட்டிக்காட்டி அனைவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

அரசியல் கட்சியை ஏன் தொடங்குகிறோம் என்பதற்கான அவரது விளக்கம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும் என்று நம்புகின்றேன். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →