முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 0.57 அடி குறைந்து வருகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 8:47 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 0.57 அடி குறைந்து வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா நெற்பயிர்களின் பாசனத்திற்காக  கடந்த சனிக்கிழமை முதல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்து வெகுவாக குறைந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை 70.42 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 68.85 அடியாக குறைந்தது. மூன்று நாள்களில் அணையின் நீர்மட்டம் 1.57 அடி குறைந்துள்ளது.

Advertisement

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காகவும் காவிரி டெல்டா பாசனத்திற்காகவும் வினாடிக்கு 5,600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 31.72 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால்  மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 0.57 அடி குறைந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.