மின்சார ரயில் 
தமிழ்நாடு

சென்னை கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயில்கள் தாமதம் -பயணிகள் அவதி!

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

DIN

சென்னை : செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

ரயில்கள் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிக்கு செல்ல இயலவில்லை என பயணிகள்  வேதனை தெரிவித்தனர். இதனிடையே ரயில் நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

செங்கல்பட்டிலிருந்து புறப்படும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறால் நிறுத்தப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் 20 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற குறைபாடுகளை ரயில்வே துறை விரைந்து சரிசெய்து பயணிகளின் அசௌகரியத்தை தவிர்க்க  ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி மக்கள் சந்திப்பு வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

தமிழகத்தில் ஹிந்து தர்மத்தை பின்பற்ற சட்டப் போராட்டம் நடத்தும் நிலை! பவன் கல்யாண்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

தங்கம் விலை எவ்வளவு? இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT