தமிழ்நாடு

விஜய் கட்சி பெயருக்கு புதிய சிக்கல்?

நடிகர் விஜய் கட்சியின் பெயருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. 

DIN

நடிகர் விஜய் கட்சியின் பெயருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. 

நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம். சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரைப் பதிவு செய்தார்.

இதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக டிவிகே (TVK) என்று குறிப்பிட்டு வந்தனர். இது தொடர்பாக ஹேஷ்டேக்குகளும் சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது. 

இதனிடையே விஜய் கட்சிக்கு ஆங்கிலத்தில் சுருக்கமாக டிவிகே என்று வழங்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேர்தல் ஆணையத்தில் முறையிடவுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி 2012-ல் துவங்கப்பட்டு கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. 

தமிழக வாழ்வுரிமை கட்சியும், ஆங்கிலத்தில் டிவிகே என்று வருவதால், டிவிகே என்பதை விஜய்க்கு வழங்க கூடாது என முறையிடுவோம் என வேல்முருகன் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்க மன்றாடிய பாதிக்கப்பட்ட பெண்

ஏா்போா்ட் மூா்த்தி ஜாமீன் மனு தள்ளுபடி

பிகாா் தொழிலாளியை தாக்கி வழிப்பறி

ரூ.10.89 கோடி மோசடி: வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

SCROLL FOR NEXT