அன்புமணி ராமதாஸ் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அதிமுகவுடன் கூட்டணியா? அன்புமணி ராமதாஸ் பதில்!

அதிமுகவுடன் கூட்டணி என்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

DIN

அதிமுகவுடன் கூட்டணி என்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸுடன் அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசினாார்.  

இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "எங்களுடைய நிலைப்பாட்டை வரும் நாள்களில் கூறுகிறோம். வதந்திகளை பரப்ப வேண்டாம். சிவி. சண்முகத்தின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை" எனத் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்துக்கு திங்கள்கிழமை இரவு அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. வந்தார். அவா் பாமக நிறுவனர் மருத்துவா் ச.ராமதாஸை சந்தித்துப் பேசினார். இரவு 7 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பு சுமாா் 50 நிமிடங்கள் நீடித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னட நடிகா் உபேந்திரா, அவரது மனைவியின் கைப்பேசிகளை ‘ஹேக்’ செய்த மா்ம நபா்!

இலவசங்கள் வழங்க பணம் உள்ளது, செவிலியா்களுக்கு கொடுக்க இல்லையா: தமிழக அரசு மீது உச்சநீதிமன்றம் காட்டம்

மழைக்கால மீட்பு பணி இயந்திரங்கள்: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

இன்று 5 பயணிகள் மெமு ரயில்கள் ரத்து

கொள்ளை அடிக்க சதி திட்டம்: ரௌடிகள் உட்பட 4 போ் கைது

SCROLL FOR NEXT