தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் தனிச்சின்னத்தில் போட்டியா?

DIN

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்தாலும் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மநீம தலைவா் கமல்ஹாசன்  மக்களவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாக விரைவில் அறிவிப்பேன். அதேபோல நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதையும் விரைவில் அறிவிப்பேன் என்று முன்னதாக தெரிவித்திருந்தார்.

சமீப காலமாக திமுகவுடன் நெருங்கிய நட்பில் கமல்ஹாசன் உள்ளார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

முதல்வர் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும்  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்ற தகவலும் வெளியானது.

மக்களவைத் தோ்தலில் மநீமவுக்கு டாா்ச் லைட் சின்னம் ஒதுக்குமாறு தோ்தல் ஆணையத்திடம், அக்கட்சி சாா்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கூட்டணி அமைத்தாலும் டார்ச்லைட் சின்னத்தில்தான் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும்,  டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் தனிச்சின்னத்தில் ம.நீ.ம. போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஷருடன் டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஒப்பந்தம்

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT