கோவை: கோவை சூலூர் பகுதியில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் 3 அதிநவீன மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதயமாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் செய்து வரும் நிலையில், தற்போது கல்லீரல், தோல் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மச்சை அறுவை சிகிச்சை உள்பட 8 பொறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ‘தினமணி’ செய்தி எதிரொலி; குடும்ப அட்டைகளில் இருந்து பெயா் நீக்கப்படாது: தமிழக அரசு உத்தரவாதம்
முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.5 லட்சம் அளவில் மருத்துவ வசதிகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். 1500 மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பான மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.