தமிழ்நாடு

உசிலம்பட்டி அருகே மலைவாழ் கிராமங்களில் பரவும் மர்ம காய்ச்சல்

DIN


மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைவாழ் கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், 14 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மதுரை, உசிலம்பட்டி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 குழந்தைகள் அரச மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 4 குழந்தைகள் கடுமையான காய்ச்சல் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 8 பேரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 2 பேரும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உசிலப்பட்டி மருத்துவனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலியை மீண்டும் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

ஆழ்கடலில் சாகசப் பயணம்

ஏஐ எனும் ஏழாம் அறிவு

ஒரு பித்தனின் குறிப்புகள்

SCROLL FOR NEXT