தமிழ்நாடு

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்துள்ளது. 

DIN

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளப் பதிவில், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

சுயசார்பு பாரதத்தை கட்டமைக்க நமது தேசத்தின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்காக அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளுக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அங்கீகாரம் இதுவாகும். அந்தக்கனவை நனவாக்கிய நமது பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கடந்தாண்டு காலமான நிலையில், அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரமெல் அழகா?... கஜோல்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவு!

மெல்போர்னில்.. அதிதி ராவ்!

‘பாஜக கைகளில் இருக்கும் பொம்மை’: தேர்தல் ஆணையம் மீது மஹுவா மொய்த்ரா எம்.பி. சாடல்!

கடலும் கன்னியும்... இவானா!

SCROLL FOR NEXT