தமிழ்நாடு

பாரமரிப்புப் பணி: 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பராமரிப்புப் பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

DIN

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பராமரிப்புப் பணி காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாவது:

கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணத்துக்கு காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயக்கப்படும் 22 மின்சார ரயில்களும், மறுமாா்க்கமாக தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.05 முதல் மாலை 4.30 மணி வரை இயக்கப்படும் 20 மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படும்.

பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30 பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT