கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து வருகைதரும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

DIN

சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து வருகைதரும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தை கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ராமேசுவரத்தில் தொடங்கி வைத்தாா். 199 சட்டப்பேரவை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை மத்திய அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரப்புரை மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, 200-ஆவது சட்டப்பேரவைத் தொகுதியாக துறைமுகம் தொகுதியில் இன்று நடைப்பயணம் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து மாலை 7 மணிக்கு தங்க சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜெ.பி. நட்டா உரையாற்றுகிறார். 

இந்த நிலையில்  ஜெ.பி. நட்டா தலைமையில் நடைபெறும் பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், சென்னை வரும் ஜெ.பி. நட்டாவை தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திக்க உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT