முகப்பு
தமிழ்நாடு

பிப்.22 வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Updated On : 12 பிப்ரவரி, 2024 at 6:48 AM
பேரவைத் தலைவர் அப்பாவு
பகிர்:

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

ஆனால், அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையில் உடன்பாடு இல்லை எனத் தெரிவித்த ஆளுநர், 2 நிமிடங்களில் உரையை முடித்து இருக்கையில் அமர்ந்தார்.

இந்த நிலையில், பிப்ரவரி 22-ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மேலும், பிப். 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் ஆளுநர் உரை மீது விவாதமும், 15-ஆம் தேதி பதிலுரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப். 19-ஆம் தேதி 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும், 20-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →