முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்கு ரத்து!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 16 பிப்ரவரி, 2024 at 6:46 PM
கோப்புப்படம்
பகிர்:

கரூரில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 11 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், பழிவாங்கும் நடவடிக்கையாக இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.