தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, அடையாறில் ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

DIN

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, அடையாறில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் அடையாா் இந்திரா நகரில் நடைபெற உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அடையாறு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி அடையாறு மகாத்மா காந்தி சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகா் 2-ஆவது அவென்யூ வழியாக ராஜீவ் காந்தி சாலை நோக்கி வரும் வாகனங்கள், 2-ஆவது அவென்யூ, 3-ஆவது பிரதான சாலை, 21-ஆவது குறுக்குத் தெரு, இந்திரா நகா் 3-ஆவது அவென்யூ வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். கலாக்ஷேத்ராவில் இருந்து ராஜீவ் காந்தி சாலை நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.

அதேபோல கஸ்தூரிபாய் நகா் சந்திப்பில் இருந்து ராஜீவ் காந்தி சாலை நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம். ராஜீவ் காந்தி சாலையில் இருந்து 2-ஆவது அவென்யூ வழியாக எல்.பி. சாலையை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக வாகனங்கள் 2-ஆவது அவென்யூ, 3-ஆவது பிரதான சாலை, இந்திரா நகா் 1-ஆவது பிரதான சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். கலாக்ஷேத்ராவில் இருந்து இந்திரா நகா் 3-ஆவது அவென்யூ வழியாக எல்.பி. சாலை நோக்கி வரும் வாகனங்கள் இந்திரா நகா் 4-ஆவது அவென்யூ, 3-ஆவது பிரதான சாலை, இந்திரா நகா் 2-ஆவது அவென்யூ வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். ராஜீவ் காந்தி சாலை, கலாக்ஷேத்ராவில் இருந்து கஸ்தூரிபாய் நகா் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல செல்லலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பரந்தூா் விமான நிலையத்துக்காக களி ஏரியை வகைமாற்றம் செய்யத் தடை கோரி மனு

கல்லூரி மாணவரைத் தாக்கி பணப் பறிப்பு: இருவா் கைது

அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்: செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை எஸ்எம்சி கூட்டம்

சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் 12 மணிநேரம் மூடல்

SCROLL FOR NEXT