தமிழ்நாடு

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்!

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

DIN

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். பட்ஜெட் உரையில் தங்கம் தென்னரசு பேசுகையில்,

"அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ரூ.600 கோடி மதிப்பீட்டில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் போன்ற படிப்புகளை மேம்படுத்த ரூ. 3,010 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும். பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44, 042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 200 கோடி மதிப்பில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் தரம் மேம்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

கோபி, சுதாகரின் ஓ காட் பியூட்டிஃபுல் புரோமோ விடியோ!

SCROLL FOR NEXT