பட்ஜெட் தாக்கல்: தங்கம் தென்னரசுவின் முதல் பட்ஜெட்
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் முதல் பட்ஜெட் இதுவாகும்.
சென்னை: தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் தாக்கல் செய்துள்ள தங்கம் தென்னரசு உரையில், இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரம் கொண்டது தமிழ்நாடு என்றார். மேலும், நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்க வழிகாட்டிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கடந்த 100 ஆண்டுகளில் தமிழக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பெட்ஜெட்கள் மூலம், தமிழர்களின் வாழ்வு தலைநிமிர்ந்துள்ளது என்றார்.
வரும் நிதியாண்டுக்கான (2024-25) நிதிநிலை அறிக்கை ‘தடைகளைத்தாண்டி, வளா்ச்சியை நோக்கி’ என்கிற தலைப்பில் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யவுள்ளாா்.