முகப்பு
தமிழ்நாடு

நாளை 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் இன்றும், நாளையும் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 19 பிப்ரவரி, 2024 at 9:02 AM
தமிழகத்தில் நாளை வெயில் அதிகரிக்கும்!
பகிர்:

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பிப் 19, 20 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதேசமயம் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை ... அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

முழு கட்டுரையைப் படிக்க →