தமிழ்நாடு

கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி!

சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறிவிப்பு.

DIN

பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க 100 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்து வருகிறார்.

அதில்,

சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

ஆதி திராவிடர் பழங்குடி விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு

2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்.

சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ. 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.

ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த "தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்" செயல்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டெஸ்ட்டில் பாட் கம்மின்ஸ் விளையாடுவாரா? அலெக்ஸ் கேரி பதில்!

திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா வா வாத்தியார்?

பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் மோசமானவர்கள்: வெளியேறிய திவாகர் கருத்து

தில்லியில் புதிதாக 40 மின்சார பேருந்துகள்: ரேகா குப்தா!

4 முறை சாம்பியனான ஜெர்மனி உலகக் கோப்பைக்குத் தேர்வு!

SCROLL FOR NEXT