தமிழ்நாடு

ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் : வேளாண் பட்ஜெட்

தமிழகம் முழுவதும் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள 15,280 வருவாய் கிராமங்களில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

அதில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகினறன. வேளாண் பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் முக்கிய அறிவிப்புகளாவன..

ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒரு கிராமம் ஒரு பயிர்" திட்டம் தமிழகத்தில் உள்ள 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள் வழங்கப்படும்.

நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்கப்படும்.

எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.

'துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்' உருவாக்கப்படும். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை உயர்த்த ரூ.12.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கரும்பு சாகுபடி மேம்பாடு திட்டத்தின் கீழ் புதிய ரக கரும்பு விதைகள் வழங்க ரூ.7.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

SCROLL FOR NEXT