தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சியிலிருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் விலகல்

DIN

சென்னை: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒரு பக்கம் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மக்களவைத் தேர்தலுக்கான நிதி திரட்டும் பணியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகி வருகிறார்கள். குறிப்பாக, சீமானுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், ராஜா அம்மையப்பன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதவி விலகல் கடிதத்தில், கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும், சாதிபிரிவினைகளும், சமூக படுகொலையையும் கண்டு என்னால் இனி பயணிக்க விரும்பவில்லை.

வெற்று பக்கங்களில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட தொகுதி செயலாளர்களிடம் கையெழுத்து வாங்குவது, நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் எல்லாம் யார் என்று தெரியுமா? கட்சிக்கு என்ன செய்திருக்கிறார் தற்போது நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர், கட்சிக்குள் சாதி இல்லாமல் செயல்பட முடியாதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் ராஜா அம்மையப்பன் எழுப்பியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

புதிய மக்களவையில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

‘மின்னும் பேரொளி’ சான்யா மல்ஹோத்ரா...!

SCROLL FOR NEXT