முகப்பு
தமிழ்நாடு

த.வெ.க. முதல் மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Updated On : 23 பிப்ரவரி, 2024 at 4:10 AM
பகிர்:

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த பின்னர் தமிழக அரசியலில் புதிய தலைமைக்கான தேவை உருவான நிலையில், ரசிகர்களுக்காக விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நிறுவி, மக்களுக்கு மருத்துவ முகாம், ரத்த தான முகாம், இரவு பாடசாலை, பொது நூலகம் அமைத்து கொடுத்து உதவி செய்து வந்த நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அருகே பனையூரில் உள்ள அந்த கட்சியின் தலைமையகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் உள்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் வரும் ஏப்ரல் மாதம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு முன்பாக, கட்சி ரீதியாக 100 மாவட்டங்களை உருவாக்கி நிர்வாகிகளை நியமித்த பின்னர் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →